கடந்த இரு தினங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று தற்போது இரவில் இந்த பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக தனிமழை பெய்தது தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வாகனஓட்டிகள் அவதிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேண்பாக்கம் கிருஷ்ணாபுரம் சின்னகாவனம் பெரியகாவனம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
பொன்னேரி ரயில்வே சுரங்கசாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகனஓட்டிகள் அதனை கடந்து செல்ல கடும் சிரமம் அடைந்தனர்.