மருத்துவ உதவியை பெற்று தந்த திருவள்ளூர் எம்பி

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மாதவரம், ஆவடி, புகுந்தவல்லி, திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நோயால் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு உதவும் விதத்தில் மத்திய அரசிடம் இருந்து ரூ. 71 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவிக்கு 20 பேருக்கு பெற்று காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் பெற்றுத் தந்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் 20 பேரின் மருத்துவச் செலவிற்கு மத்திய அரசிடம் 71 லட்சம் ரூபாய் மருத்துவ உதவித் தொகையை பெற்றுத் தந்ததாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது அதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், தொடர்ந்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக தன்னுடைய பரிந்துரையின்படி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி