அப்போது பையை சோதனை செய்யும் போது அதில் ஐந்து குவார்ட்டர் பாட்டில்கள் இருந்துள்ளது. அப்போது இவனது புகைப்படத்தை எடுத்து போலீஸ் செல்போனில் பதிவு செய்த போது இவன் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடிக்கும் நபர் என்று தெரியவந்துள்ளது. திருத்தணி மற்றும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை அடித்த நபர்தானே நீ என்று போலீசார் கேட்டுள்ளனர்.
அதற்கு ஆமாம் நாம் தான் கொள்ளையடித்தேன் என்ன இப்போ கைது செய்யப் போகிறீர்களா என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்று தெனாவட்டாக டாஸ்மாக் பிரபல கொள்ளையன் போலீஸ் பிடியில் சிக்கினான். அவனது பையை சோதனையிட்டபோது ரூபாய் 3,52,371 பணம் இருந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணையில் டாஸ்மாக் கொள்ளையன் குமார் என தெரியவந்துள்ளது.