திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக அமைக்கப்பட்டு வந்த பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆலாடு அருகே ஆரணி ஆற்றில் கலக்கும் திட்டத்திற்கு ஆலாடு கிராம பொதுமக்கள் கடந்த ஆறு மாத காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நகர மன்றத் தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி ஆற்று நீரை சுத்திகரிக்கப்பட்ட நீர் என பாதாள சாக்கடை கழிவுநீரை கலக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இத்திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்