சென்னையில், மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பால் மன உளைச்சலில் இருந்த சகாய செபாஸ்டின் (43), தனது மனைவி ரெக்ஸி பியூலா (38) மற்றும் குழந்தைகள் இவாஞ்சலின் அல்வினா (8), இவான் ஆண்டோ (4) ஆகியோருக்கு வாங்கிய கேக்கில் கரப்பான் பூச்சி மருந்தை கலந்துள்ளார். கேக் சாப்பிட்ட 4 வயது மகன் இவான் ஆண்டோ உயிரிழந்தார். சகாய செபாஸ்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேக் சாப்பிட்ட மகள் இவாஞ்சலின் மற்றும் அரை மயக்கத்தில் இருந்த மனைவி ரெக்ஸி பியூலா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.