திருத்தணி: குழந்தைகளுக்கு புதிய திட்டம் துவக்கம்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 திருக்கோயில்களில் 5 வயதுக்கு உட்பட்ட பச்சிளங் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இன்று காலை பச்சிளங் குழந்தைகளுக்கு காய்ச்சியப் பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த பச்சிளங்குழந்தைகளை ஆள் பிடிப்பது போல் அனைத்து குழந்தைத் தாய்மார்களையும் குழந்தைகளையும் அழைத்து வந்து வரிசையில் நிறுத்தி காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று காலை தொடங்கியது. திருக்கோயில் இணை ஆணையர் ரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி கலந்துகொண்டு பச்சிளங் குழந்தைகளுக்கு பால் வழங்கும் பணியை தொடங்கி வைத்ததாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி