விழாவின் முக்கிய நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க ராஜகோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கும், விமான கோபுரங்கள் மீது ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தி வைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த பெருந்திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அடுத்தடுத்து ரத்தாகும் விஜய் பிரசாரம்: தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி