இதனைத் தொடர்ந்து திருக்கோயில் மேல் உள்ள புனித கலசங்களுக்கு கும்பாபிஷேக புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, சிறப்பு தீப ஆராதனையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் நூக்காளம்மன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித கலச தண்ணீர் தெளிக்கப்பட்டது, மேலும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்