திருவள்ளூர்: ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் மலை மீது போக்குவரத்து சரிசெய்யும் பணியில் திருத்தணி போலீசார் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அங்கு மலைப்பகுதியில் பணியில் இருந்த லீலாவதி என்ற பெண் காவலர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அப்படியே நிலுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது தீன் என்பவர் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார். நிற்காமல் சென்றதால் அந்த ஆட்டோவை போக்குவரத்து காவலர் லீலாவதி புகைப்படம் எடுத்துள்ளார். ஏன் புகைப்படம் எடுக்கிறாய் என்று ஆட்டோ ஓட்டுநருக்கும் போக்குவரத்து காவலர் லீலாவதிக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் தகாத வார்த்தைகளில் ஆட்டோ ஓட்டுநர் தீன் பேசிவிட்டதாக திருத்தணி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் லீலாவதி நடந்தவற்றை அப்படியே எழுத்துவடிவில் புகார் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு போலீசே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோ ஓட்டுனர் தீன் எல்பிஎஃப் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் மற்றும் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து திருத்தணி டிஎஸ்பி கந்தன் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருத்தணி டிஎஸ்பி கந்தனிடம் கடும் வாக்குவாதம் மேற்கொண்டனர். மேலும் போக்குவரத்து காவலர் லீலாவதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி