திருவள்ளூர் மத்திய மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் செம்மொழி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சாமு நாசர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழர்களின் பெருமையை கூறி அவன் அந்த ஆள் என மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை ஒருமையில் பேசி இழிவுபடுத்திய அவர், குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து முதலமைச்சர் ராஜாஜி தமிழகத்தில் 6500 பள்ளிகளை மூடினார் என்றும் குயவன் மண்பாண்டம் தொழில் செய்பவர், தச்சன் தச்சு தொழில் செய்பவர், இவர் நல்லவர் வேதம் ஓதுபவர், காஞ்சிபுரத்தில் கருவறையில் வேதம் ஓதியவர் நல்லவரா என்றும் கூறிய அவர் ஸ்டாலின் என்ற உருவம் தமிழகத்தில் இல்லாவிட்டால் மணிப்பூர் போன்று தமிழகத்தை மோடி மாற்றி இருப்பார்.
இந்தியை கொண்டு வந்து அமித்ஷாவும் மோடியும் மணிப்பூர் போல் மாற்றி விடுவார்கள் என்றும், இந்தியை தெய்வீக மொழியாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். அப்போது பெண்கள் மற்றும் கட்சியினர் சிலர் பேசிக் கொண்டே இருந்ததால் அமைதியாக இருங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கோபத்துடன் கடிந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பட்டாசு வெடித்ததால் பேச்சு கேட்கவில்லை, பட்டாசு நிறுத்துங்கள் எனவும் கட்சியினரை அறிவுறுத்தினார்.