இந்த நிலையில் நேற்று மாலை ஐயப்பன்தாங்கல் பத்மாவதி நகர் இரண்டாவது தெருவில் இவர்கள் மூன்று பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ பைக்கில் வந்த பத்துக்கும் மேற்பட்ட கொண்டர் கும்பல் இந்த மூன்று பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் மூவருக்கும் தலை, கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து பைக் மற்றும் ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டனர். காயம் பட்டவர்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு வேலப்பன்சாவடி உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த பகுதி போரூர் காவல் நிலையமா அல்லது வானகரம் காவல் நிலையம் என்ற எல்லைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இதை எந்த காவல் நிலைய போலீசார் விசாரிப்பது என்று குழப்பம் ஏற்பட்டது. பின்னர் சம்பவம் நடந்த பகுதி வானகரம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வானகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.