திருவொற்றியூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணிற்கு, வீட்டின் எதிரே உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் ராமஜெயம்(25) என்பவருடன், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தவறாக நினைத்த ராமஜெயம், தன்னை காதலிக்க வற்புறுத்தி, அப்பெண்ணிற்கு தொல்லை தந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெண்ணின் வீட்டிற்கு வந்த ராமஜெயம், தகராறில் ஈடுபட்டார். புகாரின் பேரில் போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.