மனிதக்கழிவுகளை மனிதர்களே அல்லக்கூடாது, கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும்போது பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டபோது, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், வீட்டு உரிமையாளரின் ஏற்பாட்டில் தொழிலாளர்கள் கையுறைகள், காலணிகள் இன்றி வெறும் கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால் தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். அலட்சியமாக செயல்பட்ட வெங்கத்தூர் ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.