திருவள்ளூர்: வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி பகுதியில் சரஸ்வதி (55) என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் அவரை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகை செயின், கம்மல் மற்றும் செல்போனை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், கொலை செய்து நகைகள் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி