திருத்தணி: நகை வாங்குவதுபோல் 3 சவரன் சங்கிலியை திருடிய பெண்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் ம.பொ.சி. சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் ரோணக்குமார் (28). இந்த நிலையில் இவர் நகைக்கடையில் இவரது தந்தை பிரகாஷ் சந்தை இருக்க வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது நகைக்கடைக்கு வந்த சிவப்பு-பச்சை கலர் புடவை உடுத்திய நடுத்தர வயதுடைய பெண் நகை வாங்குவதுபோல் வந்து நகை வாங்காமல் திரும்பிச் சென்றுள்ளார். 

நகைகளைப் பார்த்துவிட்டு சென்ற இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, நகைக்கடையில் இருந்த பிரகாஷ் சந்த் நகைகளைச் சரிபார்க்கும்போது 3 சவரன் தங்கச் சங்கிலிகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தி, அவரது மகன் ரோணக்குமாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

 இவர் உடனடியாக சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை எடுத்துக்கொண்டு  திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்துகொண்ட போலீசார் மூன்று சவரன் தங்கச் சங்கிலிகள் ரூபாய் 90 ஆயிரம் மதிப்பு என்று மதிப்பீடு செய்து புகாரை பதிவுசெய்து, நகைக்கடையில் திருடிச் சென்ற அந்தப் பெண்ணைச் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடி வருகின்றனர். 

இன்று ஒரு சவரன் ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள நிலையில் 2.40 லட்சம் மதிப்புடைய தங்கச் சங்கிலிகளை ரூ.90 ஆயிரம் மதிப்பீடு என்று போலீசார் பதிவு செய்துள்ளதைக் கண்டு நகைக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி