பூந்தமல்லி அருகே குடிநீர் லாரி மோதி - 2 பேர் பலி

ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது இடித்து விட்டு வேகமாக சென்றது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மற்றும் ஆண் ஆகிய இருவர் காயமடைந்தனர். சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. மின்சார வயர்கள் கீழே சாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் லாரி டிரைவரை இழுத்து பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி லாரியின் கண்ணாடிகளை கற்கள் வீசி அடித்து உடைத்தனர்.

இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். டிரைவர் அழகுராஜா கஞ்சா மற்றும் மது போதையில் லாரி இயக்கி விபத்து ஏற்படுத்தியதில் பைக்கில் சென்ற தனபால் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது கிருஷ்ணன் என்பவர் உடன் பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற தேவி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மேலும் கிருஷ்ணன் படுகாயங்களுடன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி