அதே ஆண்டு ஜூலை 7ம் தேதி, அந்த பெண் தன் குடும்ப கஷ்டத்தை கூறி செந்தில்குமாரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க, ஆவடி அடுத்த அண்ணா நகர், லட்சுமி நகரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு செந்தில்குமார் சென்றுள்ளார். வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
திடீரென அங்கு வந்த நான்கு பேர் கும்பல், அந்த பெண்ணை காரில் ஏற்றி அனுப்பினர். பின், செந்தில் குமாரை நிர்வாணமாக்கி, சரமாரியாக தாக்கி 15 சவரன் நகை மற்றும் 13, 000 ரூபாய் பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, கண்ணை கட்டி அவரை காரில் கடத்தி, முடிச்சூரில் தள்ளிவிட்டு தப்பினர். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முகப்பேர், ஜெ. ஜெ. நகரைச் சேர்ந்த அமீனா, 23, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பெத்தேர் ஹசில், 31, ஆகியோரை, ஆவடி போலீசார் நேற்று கைது செய்தனர்.