திருவள்ளூர்: 17 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் இருவர் கைது

சென்னை மாதவரம் பகுதியில் 1.5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை வழக்கில் கடந்த 20ந்தேதி கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு சம்பந்தமாக கைதானவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சென்னை புரசைவாக்கம் பொன்னப்பர் தெரு பகுதியை சேர்ந்த இரும்பு ஏற்றுமதி தொழில் செய்து வரும் சாகுல் ஹமீத் மற்றும் எம்கேபி நகர் பகுதி சேர்ந்த கார் மெக்கானிக் லாரன்ஸ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

கார்த்திக் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில் மாதவரம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி