திருவள்ளூர்: மேடையில் நடிகர் சத்யராஜ் சரவெடி பேச்சு

அம்பத்தூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடையில் பேசிய நடிகர் சத்யராஜ், சினிமா வசனங்கள் வெறும் பொழுதுபோக்கு என்றும், அதன் மூலம் அறிவு வளராது என்றும் தெரிவித்தார். கொள்கைகளைப் பேசும் இந்த மேடையில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்டால்தான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போர்ப்படைத் தளபதியாகச் செயல்படுவதாகவும், இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என ஒரு சராசரி மனிதனாக விரும்புவதாகவும் சத்யராஜ் தனது உரையில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி