திருவள்ளூர் அருகே சத்தரை கிராமத்தில் கூவம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தகவல் பரவியதும் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 3 முதல் 4 அடி உயரமுள்ள சிலைகளை மீட்டனர். சிலைகளின் காலம் மற்றும் பெயர் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் இதே ஆற்றில் 50 சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.