திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள நசரத் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில், தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் இணைந்து மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டிகளை நடத்தியது. இந்த போட்டிகளை ஆவடி ஆய்வாளர் திரு. ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கத்தின் செயலாளர் முனைவர் ராஜசேகர் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அணிகள் இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றன.