திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அகரம் சன் சிட்டி குடியிருப்பு பகுதியில் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர் போன்றவற்றை பூர்த்தி செய்யாததால், குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே இருந்த சங்கத்தினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், புதிய சங்கம் அமைக்கப்பட்டு சந்தா வசூலிக்கப்படுகிறது. மின்சார கட்டணம் ரூ. 16 லட்சம் நிலுவையில் உள்ளதாலும், குடிநீர் கட்டணம் செலுத்தாததாலும் மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தற்காலிகமாக மறியல் கைவிடப்பட்டது.