இந்நிகழ்வில் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், பெருந்துறை முருகன் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் கூறும்போது பொதுமக்கள் தங்களது வெளியூர் பயணத்தின்போது வீடுகளைப் பூட்டிக்கொண்டு செல்வது பற்றி காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் உங்கள் வீடுகளின் அருகில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனே காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் துணைத் தலைவரும், சமூக நலன் ஆர்வலருமான பாபு உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.