திருவள்ளூர்: இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பரந்தாமன் (52) என்பவரின் மகள் சபிதா, உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தையை பார்க்க வந்த உதயகுமாருக்கும், சபிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, சபிதாவின் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் இரு தரப்பிலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி