திருவள்ளுர் மாவட்டம், ஆவடி பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று (30.12.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் (ம) வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள் மாணவியர்களுக்கு வங்கிப் பற்று அட்டையினை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். சந்திரன், ஆவடி மாநகராட்சி மேயர் திரு. கு. உதயகுமார், ஆகியோர்கள் உள்ளனர்.