பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுகவினருக்கு நற்சான்றிதழை தான் அளித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது குறித்த செய்தியாளர் கேள்விக்கு, மத்திய அரசுக்கு லவானி பாடுவது நோக்கமாகக் கொண்டிருக்கின்ற பாரதிய ஜனதாவிடம் கட்சியை முழுமையாக அடமானம் வைத்திருக்கின்ற ஜெயக்குமார் போன்ற அதிமுகவினருக்கு சுயமரியாதை என்பது அறவே பிடிக்காத ஒன்று.
மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்ற எங்களுடைய நடவடிக்கையை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இது போன்ற லாவணி பாடுபவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலைமையில் நாங்கள் இல்லை என்று கூறினார்.