ஆவடி பகுதியைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன் என்பவரை, ரியல் எஸ்டேட் தரகர் பாஸ்கரன் என்பவர் 55 லட்சம் ரூபாய்க்கு மோசடி செய்துள்ளார். இணையதள விளம்பரத்தைப் பார்த்து லட்சுமி நரசிம்மன் பாஸ்கரனைத் தொடர்பு கொண்டுள்ளார். அரக்கோணம் அருகே நிலம் இருப்பதாகக் கூறிய பாஸ்கரன், ஒரு லட்சம் ரூபாய் முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள 54 லட்சத்திற்கு காசோலையைப் பெற்றுள்ளார். பின்னர், நிலத்தை வழங்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து லட்சுமி நரசிம்மன் அளித்த புகாரின் பேரில், பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.