திருவள்ளூர்: உயிர் மின்னழுத்த ஒயர்கள் அறுந்து வெடித்து சிதறி தீ விபத்து

திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்க நீதிமன்ற வளாகத்தை சுற்றி பல்வேறு இடங்களில் பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் பைப்லைன் அமைக்க நீளமாக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இன்று ஜேசிபி எந்திரம் மூலம் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது நீதிமன்றத்திற்கு ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு செல்லும் உயர்மின் அழுத்த கேபிள்கள் பூமிக்கு அடியில் மேலோட்டமாக புதைக்கப்பட்டிருந்ததால் ஜேசிபி எந்திரம் மூலம் பைப்லைன் தோண்டும்போது கவனக்குறைவால் மின் கேபிள்கள் மீது பட்டு அறுந்ததால் ஒன்றோடு ஒன்று உரசி வெடித்து சிதறி புகை மூட்டமாக மாறியது. 

பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் சிதறியதால் நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் பதட்டம் அடைந்தனர். உயர்மின்அழுத்த கேபிள்கள் வெடித்து சிதறி அதிக சத்தத்துடன் காணப்பட்டதால் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை துண்டித்தனர். இந்த விபத்தில் ஜேசிபி ஓட்டுநர் கோவிந்தராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி