ஆவடி அருகே மகனை கொன்ற தந்தை கைது

அம்பத்தூர் அருகே, கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதர் (32) குடும்பத்துடன் வசித்து வந்தார். அடிக்கடி குடும்ப சண்டை காரணமாக மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றார். தனிமையில் இருந்த ஸ்ரீதர், போதையில் தந்தை மன்மதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு, போதையில் இருந்த ஸ்ரீதரை அவரது தந்தை மன்மதன், தொண்டையில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அம்பத்தூர் போலீசார் மன்மதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி