திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, மாநெல்லூர் - சூரப்பூண்டி தொழில் பூங்காவிற்கான சாலை விரிவாக்கப் பணியின் போது, சாலையின் இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் இல்லாததால், அதிக எடை கொண்ட லாரி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பினார்.