அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (40). இவர் ஏற்கனவே திருமணமான சத்யா (45) என்பவருடன் 2வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சத்யா சென்று விட்டதால் லட்சுமி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மூலமாக தொடர்ந்து பல பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி அவர்களுடன் பழகி வருகிறார். அவரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவரை காவல்துறையினர் விடக்கூடாது. சிறையில் அடைக்க வேண்டும்’’ என்றார்.