ஆவடி: காம்பேக்ட் ரக பீரங்கிகள் அனுப்பி வைப்பு

சென்னை அருகே உள்ள ஆவடி தின்னூர்தி தொழிற்சாலையில் (ஹெச் வி எஃப்) இருந்து தற்போது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வரும் பகுதிகளான இந்திய எல்லையில் அமைந்த பஞ்சாப் குஜராத் ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளுக்கு எதிரிகளின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நவீன தரைப்படை ராணுவ டேங்குகள் பயன்படுத்தப்பட்டு எதிரிகளை பந்தாடி வரும் சூழலில் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக தமிழகத்தில் உள்ள ஆவடியில் அமைந்துள்ள தின்னூர்தி தொழிற்சாலையில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கும் காம்பேக்ட் ரக பீரங்கிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அவை சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் பாடியநல்லூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மிகுந்த பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. அதனை பொதுமக்கள் பெருமிதத்துடன் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி