ஆவடி, அய்யப்பாக்கம் ஜோதிநகர் பிராதன சாலையில் விலை உயர்ந்த பைக் ஒன்றை திருடர்கள் திருடி சென்றுள்ளனர். தற்போது அவர்களின் சிசிடிவி காட்சி புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அதே பகுதியில் ஆட்டோ ஒன்று திருடு போனது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.