சென்னையின் அம்பத்தூரில், வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி, மர்மநபர்களால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.