போரூர், மதனந்தபுரத்தைச் சேர்ந்த தயாநிதி(56) என்ற எலக்ட்ரீஷியன், நேற்று மதியம் போரூர் சிக்னல் அருகே பைக்கில் சென்றபோது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் கைது செய்யப்பட்டார்.