திருவள்ளூர்: அழகு நிலையத்தில் கடையில் தீ விபத்து

திருத்தணியில் மூடப்பட்டிருந்த பெண்கள் அழகு நிலையத்தில் சாமி விளக்கு எரிந்து கடையின் மேற்கூரை எரிந்தது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் அரக்கோணம் சாலையில் நகராட்சி கவுன்சிலர் சாந்தி என்பவருக்குச் சொந்தமான பில்டிங் கட்டிடம் உள்ளது. இதில் கடையில் பெண்கள் அழகு சாதனங்கள் நிலையம் நடத்திவருபவர் பவித்ரா இவர் ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை அழகு சாதனங்கள் நிலையத்தில் விளக்கு ஏற்றி சாமிக்கு கும்பிட்டு விட்டு விளக்கு எரியவிட்டு அருகில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். 

இந்த விளக்கானது மேற்கூரையின் பிளைவுட்டை எரித்து கடை முழுவதும் புகைமூட்டம் நிலவியது. இந்தச் சம்பவத்தைக் கண்காணிப்பு கேமராவில் கண்ட அழகு சாதனங்கள் நடத்தும் உரிமையாளர் பவித்ரா உடனடியாக திருத்தணி தீயணைப்புப் படை வீரர்களுக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் அழகு சாதனங்கள் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இடத்தை அணைத்தனர். அழகு சாதனங்கள் நிலையத்திலிருந்து புகை வெளியேற்றப்பட்டதால் நெருப்பு அணைக்கப்பட்டதால் அழகு சாதனங்கள் நிலையத்திலிருந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் விபத்து ஏற்படாமல் இருந்து தப்பியது. இதனால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி