திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், கடந்த ஒரு வாரமாக பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 58 ரவுடிகளை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 30 பேர் புழல் சிறையிலும், 28 பேர் திருவள்ளூர் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.