சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் தற்போது 6.48 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 55.14% ஆகும். இதனால் வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.