ஆவடி: வீடு மற்றும் கடைக்கு மின் இணைப்பு வழங்க 15000 லஞ்சம்.. கைது

ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் புதிய வீடு மற்றும் கடை கட்டி வருகிறார். இதற்காக மின் இணைப்பு பெற மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சுப்ரமணியன் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ராகவன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினர். ராகவன் அந்தப் பணத்தை மின்வாரிய அதிகாரியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் சுப்ரமணியனைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி