சென்னையை அடுத்த ஆவடியின் அயப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.