திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த நிலையில் மர்ம நபர் அவரை கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். இதையடுத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் தற்போது நலமுடன் இருப்பதால் இன்று (ஜூலை. 19) மாலையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.