திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. இதனால், இடைக்கால தடை கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 8 வாரங்களுக்கு பிறகே நடைபெறும்.