திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மீது இரு நாட்களில் விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிபதி எம்.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் மனு தாக்கல் செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.