திருப்பரங்குன்றம் விவகாரம்.. தமிழக அரசு மேல்முறையீடு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நூறு வருடமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சனை என்றும், கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி