திருப்பரங்குன்றம் விவகாரம்.. அரசின் மேல்முறையீடு நாளை விசாரணை

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு நாளை (டிச.4) விசாரணைக்கு வரவுள்ளது. நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை தொடர்ந்து, நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதால் பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி