மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகாதீபத்தை ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இன்று (டிச.3) மாலை 6:55 மணி வரை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் அங்கு திரண்ட இந்து அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, காவல் துறையினரின் தடுப்பை மீறி கோயிலுக்குள் நுழைந்துள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்றி: bbctamil