திருப்பரங்குன்றம் வழக்கு.. திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றுவது மட்டுமின்றி, சொத்து உரிமை தொடர்பானதும் கூட என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தீபத்தூணில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு தீபம் ஏற்றவில்லை என மனுதாரர் தரப்பு தொடர்ந்த வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. திங்கள்கிழமைக்குள் உரிய உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி