இதையடுத்து நேற்று களியக்காவிளை உட்பட்ட படந்தாலுமூடு சோதனை சாவடி அருகில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். உடனே ஐந்து பேரை கைது செய்த போலீசார் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் களியக்காவிளை பகுதியை சேர்ந்த சஞ்சய் (21), ஜெபின் (21), ஜோயல் (21) மேலும் 18, 17 வயது ஆன கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இளைஞர்கள் வந்த இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேரின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து கண்டித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்