இன்ஸ்டாவில் பழக்கம்.. நெல்லை சிறுமியிடம் சில்மிஷம் செய்த இளைஞர்

திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த சிறுமியிடம் இன்ஸ்டா மூலம் பழகி சில்மிஷம் செய்த இளைஞரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரன்குடி அழவைகரைவாடி பகுதியை சேர்ந்த மாதேஷ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறிய மாதேஷ்வரன், முதலில் சிறுமியை தூத்துக்குடிக்கு வரவழைத்து, பின்னர் அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், மாதேஷ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி