நெல்லை: பஸ்சில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.1.90 லட்சம் திருட்டு

சாத்தான்குளத்தைச் சேர்ந்த சித்திரைகனி (40) என்பவர், அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.1.90 லட்சத்துக்கு நகையை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர், அந்தப் பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு அரசு பேருந்தில் சென்றார். பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் பணப்பையை திருடிச் சென்றுள்ளார். திசையன்விளைக்கு வந்ததும் பணப்பையை சோதித்தபோது பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி